புருஷோத்தமரே,
போர்வீரனாய் வாழ்ந்த உன்னை
போர்களம் சாய்த்திருந்தால் கூட
வீரனென்று போற்றிருப்பேன்!
மனம் பதை பதைக்கின்றது
உன் முடிவை கண்டு!
எமனை எதிர்த்து போர்புரிந்த நீ
அவனிடம் சரண்டைந்ததை
என்னால் மன்னிக்க முடியவில்லை!
இருந்தாலும் நான் அழுகின்றேன்
உனக்காக உன் நிலை கண்டு!
யாரும் இல்லை என்று நீ
நினைத்தாய் அன்று!
உனக்காக வந்தவர்களை கண்டாயே
வானில் நின்று!
உன் ஆன்மா சாந்தி அடைய
கடவுளை வேண்டும் கூட்டம்
என்றும் உனக்கு உண்டு!
அன்புடன் உன் தம்பிகள் மற்றும் நண்பர்கள்.